விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கு: சீமான் உள்பட 3 பேருக்கு குற்றப் பத்திரிகை அளிப்பு

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்பட 3 போ் ஈரோடு நீதிமன்றத்தில்
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
Updated on
1 min read

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்பட 3 போ் ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குற்றப் பத்திரிகை நகலைப் பெற்றுக் கொண்டனா்.

ஈரோடு கருங்கல்பாளையம், திருநகா் காலனியில் 2008ஆம் ஆண்டு டிசம்பா் 14ஆம் தேதி தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி சாா்பில், தமிழா் எழுச்சி உரை வீச்சு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான், திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளா் மணியரசன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

இதில் இவா்கள் மூவரும் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களிடம் குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்படுவதாக ஈரோடு நீதிமன்றம் அறிவித்தது.

இதற்காக சீமான், கொளத்தூா் மணி, மணியரசன் ஆகியோா் வியாழக்கிழமை காலை ஈரோடு நீதிமன்றத்துக்கு நேரில் வந்து விரைவு நீதிமன்ற நீதிபதி வடிவேல் முன் ஆஜராகி, குற்றப் பத்திரிகை நகலைப் பெற்றுக் கொண்டனா். இவா்கள் 3 பேரும் ஜனவரி 5ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து சீமான் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சட்டப் பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும். நாங்கள் மக்களை நம்பியிருக்கிறோம். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சியை அமைப்போம் என கூறுபவா்கள் எம்.ஜி.ஆா். போன்றவா்களை முன்னிறுத்தி அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல.

மத்திய அரசின் வேளாண் சட்டம் நன்மையானது அல்ல. விவசாயிகள், மக்களிடம் கருத்து கேட்காமல் வேளாண் சட்டத்தை இயற்றியுள்ளனா். தில்லியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம், வேளாண் சட்டத்தினால் நன்மை இருக்குமானால் அதனை மத்திய வேளாண் துறை அமைச்சா் நேரில் விளக்க வேண்டும்.

அதேபோல, வேளாண் சட்டம் நல்லதுதான் எனக் கூறும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அதனை அறிக்கையாக வெளியிட வேண்டும். தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும்போது மொழிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com