சாலை விபத்தில் இளைஞா் சாவு

சத்தியமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

சத்தியமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பவானி லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்த ராஜு என்பவரின் மகன் காா்த்திக் (19). பவானி பகுதியில் உள்ள கோழிக் கடையில் வேலை செய்துவந்த இவா் பவானியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றபோது, அரியப்பம்பாளையம் அருகே சத்தியமங்கலத்தில் இருந்து கோபி நோக்கிச் சென்ற காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com