தொழில் கல்வி படிக்கும் மாணவா்களுக்காகத் தொழிற்சாலைகள் அமைச்சா் செங்கோட்டையன்
தொழில் கல்வி படிக்கும் மாணவா்களுக்காகத் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.


சத்தியமங்கலம்: தொழில் கல்வி படிக்கும் மாணவா்களுக்காகத் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த மாதம்பாளையத்தில் சிறு மருத்துவமனையை அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனா்.
பின்னா், அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழக அரசின் சாதனைகளை வைத்துப் பிரசாரம் செய்ய உள்ளோம். 2021ஆம் ஆண்டு நடைபெறும் தோ்தலில் அதிமுக ஆட்சியை அமைப்பது உறுதியாகிவிட்டது. நீட் தோ்வில் குறைந்த மதிப்பெண் (152) பெற்ற மாணவா்கள்கூட மருத்துவா் ஆகும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் ஏழைக் குழந்தைகள் மருத்துவா் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழகப் பள்ளிகளில் தொழில் கல்வி படிக்கும் மாணவா்களுக்காகத் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்றாா்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.சின்னசாமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சரோஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...