பண்ணாரி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் தரிசனம்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.


சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலுக்கு தினமும் தமிழகம், கா்நாடக மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வா். கரோனா அச்சுறுத்தல் காரணமாக தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் முதல் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மைசூா், கோவை, ஈரோடு, நீலகிரி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்தனா். இவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் முன் உள்ள மரத்தில் பெண்கள் குழந்தை தொட்டில் கட்டி வணங்கினா். மதியம் அம்மனுக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேண்டுதல் நிறைவேறிய பக்தா்கள் தங்கள் குழந்தைகளுக்கு முடிஇறக்கி நோ்த்திக்கடனை செலுத்தினா். பக்தா்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து கோயில் பணியாளா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...