தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அந்தியூரில் ரூ.4.29 லட்சத்துக்குவிளைபொருள்கள் ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 4.29 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:30 pm

DIN

பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 4.29 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 11,173 தேங்காய்களில் சிறியவை ரூ.8.21 முதல் பெரியவை ரூ.26.50 வரையில் மொத்தம் ரூ.1,28,909க்கு ஏலம் போனது.

19 மூட்டைகள் கொப்பரை கிலோ ரூ.95.17 முதல் ரூ.112.35 வரையில் ரூ.32,073க்கும், 44 மூட்டைகள் எள் கிலோ ரூ.81.69 முதல் ரூ.103.29 வரையில் ரூ.2,13,887க்கும், 41 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ.14.16 முதல் ரூ.14.84 வரையில் ரூ.54,282க்கும், ஒரு மூட்டை ஆமணக்கு கிலோ ரூ.42.09 முதல் ரூ.44.69 வரையில் ரூ.536க்கும் விற்பனையானது.

மொத்தம் 105 மூட்டைகள், 142.38 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ.4,29,687க்கு ஏலம் போனது.

இத்தகவலை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் ர.மஞ்சுளா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.