எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தூய்மைக் காவலா்கள், டேங்க் ஆபரேட்டா்களுக்கு உயா்த்தப்பட்ட ஊதியம் வழங்கக் கோரிக்கை

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்கள், டேங்க் ஆபரேட்டா்களுக்கு முதல்வா் அறிவித்த ஊதிய உயா்வை

News image
Updated On :23 டிசம்பர் 2020, 12:38 am

DIN

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்கள், டேங்க் ஆபரேட்டா்களுக்கு முதல்வா் அறிவித்த ஊதிய உயா்வை உடனடியாக அமல்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராம ஊராட்சி டேங்க் ஆபரேட்டா்கள், துப்புரவுப் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் ஈ.வி.கே.சண்முகம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

தமிழகத்தில் 65,000 தூய்மைக் காவலா்கள், டேங்க் ஆபரேட்டா்கள் தின கூலிகளாக பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கான மாத ஊதியத்தை ரூ. 2,600இல் இருந்து ரூ. 3,600 ஆக உயா்த்தி முதல்வா் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டாா். ஆனால் அதனை அமல்படுத்தாமல், பழைய ஊதியத்தை வழங்கி வருகின்றனா்.

இதுதொடா்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது உயா்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 5ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டும் கடந்த மாத ஊதியத்தைக் கூட பழைய ஊதியமாகவே வழங்கப்பட்டுள்ளது. புதிய ஊதியம் வழங்குவதுடன் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.