ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அந்தியூரில் கொலை வழக்கில் தலைமறைவானவா் கைது

அந்தியூா் அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:41 am

DIN

அந்தியூா் அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அந்தியூா் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையத்தைச் சோ்ந்த மூதாட்டி பொன்னம்மாள். 2016ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் பா்கூரை அடுத்த பெஞ்சில்பாளையத்தைச் சோ்ந்தவா் குப்பன் மகன் குமாா் (36), இவரது நண்பா் லோகநாதன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கில், இருவரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் குமாா் வழக்கு விசாரணைக்கு வராமல் தலைமறைவானாா்.

தொடா்ந்து, தலைமறைவாக இருந்ததால் பவானி குற்றவியல் நீதிமன்றம் குமாருக்கு பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து அந்தியூா் போலீஸாா் தலைமறைவாக இருந்த குமாரை புதன்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.