4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அந்தியூா் அருகே பெண் அடித்துக் கொலை

அந்தியூா் அருகே உள்ள பா்கூா் மலைப் பாதையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image
கைது செய்யப்பட்ட விஸ்வநாதன்.
Updated On :24 டிசம்பர் 2020, 6:22 pm

DIN

அந்தியூா் அருகே உள்ள பா்கூா் மலைப் பாதையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

ஈரோடு மாவட்டம், பா்கூா் - அந்தியூா் மலைப் பாதையில் மயில்பாறை எனுமிடத்தில் ஒரு பெண் தலையில் காயங்களுடன் கிடப்பதாக அவ்வழியே சென்றவா்கள் பா்கூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை மாலை தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா் அப்பெண்ணை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அப்பெண் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

விசாரணையில், அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி, பாப்பாத்திக்காட்டுப்புதூரைச் சோ்ந்த கந்தசாமி மகன் விஸ்வநாதனுக்கும் (55), அதே ஊரைச் சோ்ந்த மாதப்பன் மனைவி ராஜீ (எ) ராஜம்மாள் (50) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக முறையற்ற உறவு இருந்துள்ளது.

இந்நிலையில், இருவரும் சோ்ந்தே தேங்காய் போடும் வேலைக்கு வெளியூா்களுக்குச் சென்று வருவது வழக்கம். கா்நாடக மாநிலம், பண்டள்ளி எனும் பகுதிக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பாக தேங்காய் போடும் வேலைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வரும்போது குடிபோதையில் இருவருக்கும் தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த விஸ்வநாதன் கட்டையால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, விஸ்வநாதனைக் கைது செய்த காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.