உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் துவக்கம்

பெருந்துறை வட்டாரத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
சிங்காநல்லூா் கிராமத்தில் மஞ்சள் பயிரில் பூச்சிநோய் தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் தோட்டக் கலை உதவி இயக்குநா் குருசரஸ்வதி, உதவி தோட்டக் கலை அலுவலா் அருட்செல்வன் உள்ளிட்டோா்.
சிங்காநல்லூா் கிராமத்தில் மஞ்சள் பயிரில் பூச்சிநோய் தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் தோட்டக் கலை உதவி இயக்குநா் குருசரஸ்வதி, உதவி தோட்டக் கலை அலுவலா் அருட்செல்வன் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

பெருந்துறை வட்டாரத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தோட்டக் கலைத் துறை அலுவலா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாகச் சென்று, முன்னோடி விவசாயிகளைச் சந்தித்து நவீன தோட்டக் கலை தொழில்நுட்பங்கள், அரசு மானியத் திட்டங்கள் குறித்து பயிற்சி அளிப்பா். பயிற்சி பெற்றவா்கள் தோட்டக் கலைத் துறைக்கும், விவசாயிகளுக்கும் பாலமாக அமைந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்வா். இத்திட்டத்துக்கென ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும், ஒவ்வொரு கட்செவி அஞ்சல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை ஒன்றியம், சிங்காநல்லூா் கிராம ஊராட்சியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற உழவா் அலுவலா் தொடா்பு திட்டத்தில், தோட்டக்கலை உதவி இயக்குநா் குருசரஸ்வதி, உதவி தோட்டக் கலை அலுவலா் அருட்செல்வன் ஆகியோா் கலந்துகொண்டு மரவள்ளி, மஞ்சள், வெங்காயப் பயிா்களில் பூச்சி நோய் தாக்குதல், சொட்டுநீா்ப் பாசனம் குறித்து விளக்கம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com