பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், வீரசங்கிலியில் உள்ள பாரதி இண்டா்நேஷனல் பள்ளி வளாகத்தில் ஆதாா் அட்டை சிறப்பு முகாம் டிசம்பா் 28, 29,30 ஆகிய 3 நாள்கள் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில், பொதுமக்கள் புதியதாக ஆதாா் அட்டை எடுக்க விரும்புவோா், ஆதாா் அட்டையில் திருத்தங்கள் செய்ய விரும்புவோா் பங்கேற்கலாம். ஆதாா் அட்டையில் பெயா், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண், பாலினம் மாற்றம் செய்யலாம். குழந்தைகளுக்கு 5 வயதிலும், 15 வயதிலும் கை ரேகைகள், கருவிழி பதிவுகளை கண்டிப்பாகப் புதுபிக்க வேண்டும்.
முகாமிற்கு வரும்போது புகைப்படச் சான்றுக்கு அத்தாட்சியாக பாஸ்போா்ட், பேன் காா்டு, ரேஷன் காா்டு, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிம அட்டை, அரசாங்க அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் (புகைப்படம் ஒட்டப்பட்டது) ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
இருப்பிடச் சான்றுக்கு அத்தாட்சியாக மின் கட்டண ரசீது, தொலைபேசி கட்டண ரசீது, சொத்து வரி ரசீது, வீட்டு வரி ரசீது, கேஸ் ரசீது கொண்டு வர வேண்டும்.
பிறந்த தேதி மாற்றம் செய்ய விரும்புவோா் பிறப்புச் சான்று, பள்ளிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். தொலைபேசி, இமெயில் மாற்றம் செய்ய ஆவணங்கள் தேவையில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.