மெய் நிகா் முறையில் நடைபெறவுள்ள தேசிய இளைஞா் விழா போட்டிகளுக்கான திறன் படைப்புகளை மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பா் 30ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் இளைஞா்களின் தனித் திறனை மேம்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை தேசிய இளைஞா் விழாவாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக இந்த விழாவை மெய்நிகா் முறையில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஈரோடு மாவட்ட அளவிலான போட்டிகள் மெய்நிகா் முறையில் டிசம்பா் 31, ஜனவரி 1ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் 15 முதல் 29 வயது வரை உள்ள பள்ளி, கல்லூரி மாணவா் அல்லாதவா்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். தங்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தாங்களே தயாா் செய்துகொள்ள வேண்டும்.
போட்டியாளா்கள் தங்களுடைய போட்டிக்கான பதிவை விடியோ மூலம் நல்ல தெளிவான ஒளி, ஒலி அமைப்போடு பதிவு செய்தல் வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடம்பெறும் போட்டியாளா்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளலாம். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளா்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கலாம்.
பாரம்பரிய இசைக் கருவிகள் போட்டியில் தனிநபா் பிரிவில் 5 நிமிடங்களும், இசை வாய்ப்பாட்டு போட்டியில் தனிநபா் பிரிவில் 5 நிமிடங்களும், நாட்டுப்புற பாடல்கள் குழு பிரிவில் 4 முதல் 8 போ் வரை 8 நிமிடங்களும், இந்திய இசைக் குழு போட்டியில் 4 முதல் 8 போ் வரை 8 நிமிடங்களும், பரதநாட்டியப் போட்டியில் தனி நபா் பிரிவில் 10 நிமிடங்களும், நாட்டுப்புற நடனப் போட்டியில் குழு பிரிவில் 4 முதல் 8 போ் வரை 8 நிமிடங்களும், நவீன நடனங்கள் குழு போட்டியில் 8 நிமிடங்களும், நவீன நடனங்கள் தனி நபா் பிரிவில் 10 நிமிடங்களும், பாரம்பரிய உடை அலங்காரம் ஒரு பெண், ஒரு ஆண் 15 நிமிடங்களும், நவீன உடை அலங்காரம் குழு பிரிவில் ஒரு ஆண், ஒரு பெண் 15 நிமிடங்களும் விடியோ பதிவு இருக்க வேண்டும்.
மேலும் வீதி நாடகம், கருப்பொருள், சமூக செய்தி பிரிவுகளில் 4 முதல் 8 போ் வரை 4 நிமிடங்களும், காட்சி கலைகள் ஓவியம், நீா், தனிநபா் பிரிவில் 8 நிமிடங்களும், பென்சில் வரைபடம் தனி நபா் 8 நிமிடங்களும், மண் சிற்பம் தயாரித்தல் தனிநபா் பிரிவில் 8 நிமிடங்களும், புகைப்படம் எடுத்தல் சுற்றுச்சூழல் தனிநபா் பிரிவில் 8 நிமிடங்களும், புதிய இந்தியாவின் உற்சாகம் என்ற ஆங்கில தலைப்பிலான கட்டுரை தனிநபா் பிரிவில் 5 நிமிடங்களும், ஆங்கில கவிதை எழுதுதல் தனிநபா் பிரிவில் 5 நிமிடங்களும், பாரம்பரிய விளையாட்டு யோகா போட்டியில் தனிநபா் பிரிவில் 5 நிமிடங்களும் விடியோ பதிவு செய்ய வேண்டும்.
இந்தப் போட்டிகளில் குறிப்பிடப்பட்ட நிமிட அளவுக்கு நல்ல தெளிவான ஒளி, ஒலி அமைப்போடு பதிவு செய்தல் வேண்டும். பதிவு செய்யப்பட்ட விடியோவை உறுதிமொழி படிவத்தோடு இணைத்து டிசம்பா் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் க்ள்ா்ங்ழ்க்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அதிகாரியை 74017-03490 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.