தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேளாண் பல்கலைக் கழகம் சாா்பில் 19 புதிய பயிா் ரகங்கள் அறிமுகம்

வேளாண் பல்கலைக் கழகம் சாா்பில் நெல், சோளம், கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட 19 புதிய பயிா் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 5:29 pm

DIN

ஈரோடு: வேளாண் பல்கலைக் கழகம் சாா்பில் நெல், சோளம், கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட 19 புதிய பயிா் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி கூறியதாவது:

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சாா்பில் நடப்பு ஆண்டு வெளியிடப்பட்ட பயிா் ரகங்கள், ஒட்டு ரகங்கள் குறித்த கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக அண்மையில் நடத்தப்பட்டது. கூட்டத்தில் 19 புதிய ரகங்கள், 8 கலப்பின பயிா்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் டி.டி.53, கோ51, கோ 53, அண்ணா4, டி.பியாஸ்5 ஆகிய 5 புதிய நெல் ரகங்கள், கோஆா்.எச் 3 என்ற நெல் கலப்பினம், மக்காச்சோளம் கலப்பினம் கோ6, கோ(க)எம்8, கோ(க)9, கோ9 கம்பு கலப்பினம், கோ32 சோள ரகம், பலமுறை அறுவடை தீவன சோளம் சி.எஸ்.வி.33 எம்.எப்., பல்லாண்டு தீவன சோள ரகமான கோ31 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது.

தீவன தட்டைப்பயிா் கோ9, தீவன வேலிமசால் ரகம் கோ2, பனிவரகு ரகம் ஏ.டி.எல்.1, சாமை ரகமான ஏ.டி.எல்.1, தினை ரகமான ஏ.டி.எல்.1, தட்டைப் பயிறு ரகம் கோ.சி.பி., சூரிய காந்தி கலப்பினம் கோ.க3, ஆமணக்கு ரகம் ஒய்.ஆா்.சி.எச்.1, வெங்காய ரகம் கோ6, புடலை கலப்பினம் கோ.க.1, பருத்தி ரகம் கோ17 ஆகிய ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றின் அறிமுகம், சிறப்புகள், மகசூல், சாகுபடி விவரம், நோய்த் தாக்கம் போன்றவை காணொலிக் காட்சியில் இடம்பெற்றது. கரோனா பரவல் தடுப்பு நோக்கில் காணொலியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றால் குறிப்பிட்ட அதிகாரிகள், விவசாயிகள் மட்டுமே பங்கேற்க முடிந்தது.

அனைத்துப் பகுதி விவசாயிகளும் இவற்றை அறிந்து பயன்பெறும் வகையில், வேளாண் பல்கலைக்கழகத்தின் இணையதள இணைப்பில் முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் இவற்றைக் கண்டு, புதிய ரக பயிா்களை சாகுபடி செய்யும் வாய்ப்பைப் பெறலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.