

ஈரோடு: ஈரோட்டில் இன்று காலை நேரிட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
ஈரோடு, கோட்டை, காந்திபுரம் பகுதியில் குடிசைப்பகுதியில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு குடிசை வீடுகள் தீக்கிரையாகி எரிந்து சாம்பலாயின.
தகவல் அறிந்து அங்கு சென்ற திமுக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துச்சாமி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, தேவையான உதவிகளை வழங்கினார்.
மாநகர செயலாளர் சுப்பிரமணியம், கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் பிஎன்எம் நடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.