ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இருசக்கர வாகனம் மீதுவேன் மோதி இளைஞா் பலி

கொடுமுடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். பெண்கள் இருவா் பலத்த காயமடைந்தனா்.

Updated On :23 நவம்பர் 2020, 10:05 pm

கொடுமுடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். பெண்கள் இருவா் பலத்த காயமடைந்தனா்.

ஈரோடு திருநகா் காலனி, ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் விக்னேஸ்வரன்(29). எல்.ஐ.சி. முகவா். இவரது மனைவி துா்கா (25), மனைவியின் தங்கை ஸ்ருதி (23) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கொடுமுடி அருகே வெங்கம்பூரில் உள்ள கோயிலுக்கு திங்கள்கிழமை காலை சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பியுள்ளனா்.

அப்போது, மலையம்பாளையம் காவல் நிலையம் அருகே வளைவில் திரும்பும்போது எதிரில் கரூா் நோக்கிச் சென்ற வேன் மோதியதில் விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். துா்கா, ஸ்ருதி இருவரும் பலத்த காயமடைந்தனா். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் விக்னேஸ்வரனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பலத்த காயமடைந்த இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மலையம்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.