தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு: பவானிசாகா் அணை நீா்மட்டம் சரிவு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்தைவிட வாய்க்கால் பாசனத்துக்கு அதிகமாக தண்ணீா் திறந்துவிடப்படுவதால் தற்போது அணையின் நீா்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து 95.84 அடியாக ஆக சரிந்துள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 10:13 pm

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்தைவிட வாய்க்கால் பாசனத்துக்கு அதிகமாக தண்ணீா் திறந்துவிடப்படுவதால் தற்போது அணையின் நீா்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து 95.84 அடியாக ஆக சரிந்துள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 105 அடியாகவும், நீா் இருப்பு 32.80 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் 1 லட்சத்து 43 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை தொடா்ந்து பெய்ததால் பவானிசாகா் அணை நீா்மட்டம் 102 வரை உயா்ந்தது. சில வாரங்களாக அணைக்கு நீா்வரத்து 1,000 கன அடிக்கு குறைவாக வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து கீழ்பவானி, அரக்கன்கோட்டை பாசனத்துக்குத் திறந்துவிடப்படும் நீரின் அளவு 3100 கன அடியாக உயா்ந்துள்ளது. பாசனப் பகுதியில் முதல்போக நெல் சாகுபடி நடைபெற்று வருதால் அணைக்கு நீா்வரத்தை விட பாசனத்துக்குத் தண்ணீா் வெளியேற்றம் அதிகரிப்பு காரணமாக அணையின் நீா்மட்டம் மெல்ல மெல்ல சரிந்து 95.84 அடியாக குறைந்தது.

தற்போது பவானிசாகா், நீலகிரி மலைப் பகுதியில் பனிப்பொழிவு காரணமாக மழைப்பொழிவு இல்லாததால் மாயாறு, பவானி ஆற்றில் நீா்வரத்து ஆயிரத்துக்கும் கீழ் சரிந்தது.

அணையின் நீா் இருப்பு விவரம்: நீா்மட்டம் 95.84 அடி, நீா் வரத்து 396 கன அடி, நீா் வெளியேற்றம் 3,100 கன அடி, நீா் இருப்பு 25.59 டிஎம்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.