மழைக் காலங்களில் சேறு, சகதி: வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் கற்கள் பதிக்க நடவடிக்கை
ஈரோடு வ உ சி காய்கறி மார்க்கெட்டில் பிளேவர் பிளாக் கற்கள் மூலம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ தகவல் தெரிவித்துள்ளார்.


ஈரோடு வ உ சி காய்கறி மார்க்கெட்டில் பிளேவர் பிளாக் கற்கள் மூலம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ தகவல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஈரோடு பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது. பின்னர் ரூ 1 கோடி மதிப்பில் ஈரோடு வ உ சி பூங்கா பகுதியில் நேதாஜி காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 2,700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் நூற்றுக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். இந்நிலையில் மழைக்காலங்களில் வ உ சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் புகுந்து சேறும் சகதியுமாக மாறி விடுகிறது.
இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் அவதி அடைந்தனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வியாபாரிகளும் பொதுமக்களும் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ.யிடம் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று வ உ சி பூங்கா காய்கறி மார்க்கெட் பகுதியில் பிளேவர் பிளாக் கற்கள் கொண்டு சாலைகள் அமைக்கப்படும் என்று தென்னரசு எம்எல்ஏ கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ஈரோடு வ உ சி பூங்கா பகுதியில் செயல்பட்டுவரும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் பெண்களுக்கு என்று தனியாக நவீன கழிப்பறை கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். தற்போது ரூ 9.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெண்டர் கோரப்பட்டு வருகிறது. இது முடிவடைந்த பின்னர் அந்த பணிகள் தொடங்கி இரண்டு மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும்.
இதே போன்று மார்க்கெட் பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் புகுந்தது சேறும் சகதியுமாக மாறி விடுவதால் வியாபாரிகள் பொதுமக்கள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் உடன் நான் பேசினேன். இதையடுத்து வ வ சி காய்கறி மார்க்கெட் பகுதியில் பிளேவர் பிளாக் கற்கள் மூலம் அங்கு சாலைகள் அமைக்கப்படுகிறது. இந்த பணிக்கான டெண்டர் கோரப்பட்டு இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த பணிகள் தொடங்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...