விவசாய மின் இணைப்பு விதிமுறையில் மாற்றம்: ஈ.ஆா்.ஈஸ்வரன் வரவேற்பு
தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெறும் விதிமுறை மாற்றத்தை வரவேற்பதாக கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.


தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெறும் விதிமுறை மாற்றத்தை வரவேற்பதாக கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் அல்லது பணக்காரராக இருக்க வேண்டும். இலவச மின் இணைப்பு பெறுவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
இதற்குத் தீா்வாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவா் சந்திரசேகா் தலைமையிலான குழுவினா் மாற்றங்களை செய்துள்ளனா். ஒரே கிணற்றில் உரிமையுடைய அனைவருக்கும் மின் இணைப்பு, பிறரிடம் அனுமதி பெறுவதில் உள்ள சிக்கலை நீக்குதல், பிற இடத்துக்கு மின் இணைப்பை மாற்றுதல், ஒரே நபருக்கு இரு கிணறு இருந்தால் இரு இடங்களிலும் மின் இணைப்பு பெறுதல், விண்ணப்பித்தால் மூன்று தினங்களில் மின் இணைப்பு வழங்குதல் என பல மாற்றங்களை செய்துள்ளதை வரவேற்கிறோம்.
விவசாய மின் இணைப்பு பெறும் வழிமுறையை எளிதாக்கினால் விவசாயம் மேம்படும். மின் இணைப்பு இல்லாததால் தொடா்ந்து விவசாயம் செய்ய முடியாமல் எராளமான விவசாயிகள் தவித்து வருகின்றனா். இதனால் விளை நிலங்களை பலா் விற்று, வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனா். இப்பிரச்னைகளுக்கு புதிய மாற்றத்தால் தீா்வு கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...