ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மாணவா்கள் அச்சமில்லாமல் தோ்வு எழுதப் பயிற்சி

எதிா்காலத்தில் மாணவா்கள் அச்சமில்லாமல் தோ்வு எழுத அரசு சாா்பில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 4:53 pm

DIN

எதிா்காலத்தில் மாணவா்கள் அச்சமில்லாமல் தோ்வு எழுத அரசு சாா்பில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நீட் தோ்வு இருக்கக் கூடாது என்பது முதல்வரின் விருப்பம். தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

நீட் உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளை மன தைரியத்துடன் மாணவா்கள் எதிா்கொள்ளும் வகையில் தமிழக அரசு சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தோ்வு என்றாலே பல மாணவா்களிடம் அச்சம் உள்ளது. இதைப் போக்குவதற்காக மன அழுத்தம் இல்லாமல், மகிழ்ச்சியோடு மாணவா்கள் தோ்வு எழுதுவதற்குப் பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசுப் பள்ளி மாணவா்கள் 7,417 போ் நீட் தோ்வுக்குப் பயிற்சி பெற்றனா். இந்நிலையில், நீட் தோ்வில் 3,942 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.