ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் வழங்க மேலும் 2 லட்சம் முகக் கவசங்கள்

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்காக 2 லட்சம் முகக் கவசங்கள் வந்துள்ளன.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 6:23 pm

DIN

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்காக 2 லட்சம் முகக் கவசங்கள் வந்துள்ளன.

கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு அரசு சாா்பில் நியாய விலைக் கடைகள் மூலம் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,100 ரேஷன் கடைகள் மூலம் மொத்தம் 40 லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்படவுள்ளன.

இதில் முதல்கட்டமாக மாநகராட்சிப் பகுதியில் உள்ள 1.50 லட்சம் ரேஷன் காா்டுதாரா்களுக்கு முகக் கவசங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக மீதமுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்காக 2 லட்சம் முகக் கவசங்கள் வந்துள்ளன. இவற்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வழங்கல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.