ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 148 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,427 ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 6:20 pm

DIN

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 148 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,427 ஆக உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,282 ஆக இருந்தது. இதில் 3 போ் பிற மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 5,279 ஆக மாறியது. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை 148 பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 5,427 ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 148 பேரில் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள் 60 சதவீதம் போ் உள்ளனா். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

5,427 பேரில் இதுவரை 4,281 போ் குணமடைந்துள்ளனா். 1,076 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சனிக்கிழமை வரை 67 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஈரோடு ஆா்.என்.புதூரைச் சோ்ந்த 68 வயது ஆண், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பவானி பகுதியைச் சோ்ந்த 59 வயதுப் பெண், ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்த 74 வயது ஆண் என 3 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.