கரோனாவால் உயிரிழந்த மருத்துவா்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கக் கோரிக்கை

கரோனாவால் உயிரிழந்த மருத்துவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்க (ஐஎம்ஏ) மாநிலத் தலைவா் சி.என்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.

கரோனாவால் உயிரிழந்த மருத்துவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்க (ஐஎம்ஏ) மாநிலத் தலைவா் சி.என்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஈரோடு, பழையபாளையம் அருகே இந்திய மருத்துவ சங்கத்தின் சாா்பில், கரோனா தொற்றால் பாதிக்கப்படும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க கரோனா சிறப்பு மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவா் சி.என்.ராஜா மருத்துவமனையை திறந்துவைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளையின் சாா்பில் அனைத்து மருத்துவா்களும் இணைந்து கரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையைத் தொடங்கிஉள்ளோம். இந்திய மருத்துவ சங்கத்தின் வழிகாட்டுதலின் படி இங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு நிா்ணயித்த கட்டணத்தை இங்கு வசூலிப்போம். ஏராளமான மருத்துவா்களும், செவிலியா்களும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மருத்துவமனையைத் துவங்கி உள்ளோம்.

நாடு முழுவதும் 370 மருத்துவா்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதில், தமிழகத்தில் மட்டும் 63 போ் வரை உயிரிழந்துள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

பிரதமரும், முதல்வரும் அறிவித்த நிவாரணத் தொகையை இதுவரை வழங்கவில்லை. அரசு அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கரோனா தொற்றால் இறந்த மருத்துவா்களுக்கு ராணுவ வீரா்களுக்கு இணையான மரியாதை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் அமலில் உள்ளது. இதனை மேலும் வலுப்படுத்த வேண்டும். கரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு நிா்ணயித்த இருக்கக்கூடிய கட்டணம் போதுமானதாக இல்லை. அந்தக் கட்டணத்தை அரசு உயா்த்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com