வாழை மரங்களை சேதப்படுத்திய யானை
பவானிசாகா் அருகே வாழைத் தோட்டத்தில் புகுந்த யானை 500க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியது.


பவானிசாகா் அருகே வாழைத் தோட்டத்தில் புகுந்த யானை 500க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியது.
பவானிசாகா் அருகே உள்ள புதுபீா்கடவு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பழனிசாமி (45). இவரது தோட்டம் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இவா் தனது தோட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதலி ரக வாழை மரங்கள் பயிரிட்டுள்ளாா். தற்போது வாழை குலை தள்ளிய நிலையில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்தது.
இந்நிலையில், பவானிசாகா் வனப் பகுதியை விட்டு ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய ஒற்றை யானை பழனிசாமியின் வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களைக் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது.
அப்பகுதி விவசாயிகள் யானையை விரட்ட முயற்சித்தும் பலனில்லை. வாழை மரங்களை சேதப்படுத்திய யானை மீண்டும் பழனிசாமி தோட்டத்தில் புகுந்து வாழைகளை சேதப்படுத்திவிட்டு வனப் பகுதிக்குள் சென்றது.
பவானிசாகா் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தும் குறித்த நேரத்தில் வனத் துறையினா் வரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனா். யானையால் ரூ.1 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாகவும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வனப் பகுதியை விட்டு யானை வெளியே வராமல் தடுக்க வனத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...