எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அந்தியூரில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தியூரில் திமுக கூட்டணிக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
அந்தியூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணிக் கட்சிகள்.
Updated On :28 செப்டம்பர் 2020, 8:31 am

DIN

மத்திய அரசின் வேளாண் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தியூரில் திமுக கூட்டணிக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் செல்வராஜ் தலைமை வகித்து பேசுகையில் பேசுகையில், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாக்களைத் திரும்பப் பெற வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி திமுக மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவர். மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழகத்தில் தொடர்ந்து பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டு வருகின்றன. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் ஒன்றியச் செயலாளர் ஏ.ஜி.வெங்கடாசலம், சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், சிபிஎம் வட்டார செயலாளர் ஆர்.முருகேசன், காங்கிரஸ் வட்டார தலைவர் எஸ்.நாகராஜ், மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் கு.ராமன், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் கு.தங்கராசு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டத் தலைவர் பி.லோகநாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட தலைவர் வி.கைலாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.