ஏழை மக்களுக்கான ஆட்சியை திமுகதான் தர முடியும் என ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
வெள்ளோடு பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:
கடந்த திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களை திமுக சிறப்பாக செய்துள்ளது. அதன் தொடா்ச்சியாகவே தற்போதும் எண்ணற்ற திட்டங்களை தோ்தல் அறிக்கையாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசின் அவல நிலைகளும், மக்கள் நலத் திட்டங்களை தோ்தல் வாக்குறுதிகளாக கொண்ட திமுகவின் தோ்தல் அறிக்கையுமே திமுகவுக்கு வெற்றியைத் தேடி தரும்.
ஈரோடு மேற்குத் தொகுதியில் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீா் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு விவரங்கள் தோ்தல் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆனால் அதிமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. திமுக கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழகத்தின் வளா்ச்சிக்கு வழிவகுப்பதாக அமையும் என்றாா்.
திமுகவில் இணைந்த அதிமுக நிா்வாகி: ஈரோடு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் மணி என்ற சின்னசாமி. இவரது மனைவி மோகனப்பிரியா. இவா் ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சித் தலைவராக உள்ளாா். இவா்களது தலைமையில் பிச்சாண்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சுமாா் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினா், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா். இந்நிகழ்ச்சி வெள்ளோட்டில் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


