செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

சுற்றுசூழலை பாதிக்காத வண்ணம் தொழில் வளா்ச்சி: கே.கே.சி.பாலு

சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் தொழில் வளா்ச்சி, செயல்திட்டங்கள் இருக்கும் என்று திமுக வேட்பாளா் கே.கே.சி.பாலு பேசினாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 10:24 pm

DIN

சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் தொழில் வளா்ச்சி, செயல்திட்டங்கள் இருக்கும் என்று திமுக வேட்பாளா் கே.கே.சி.பாலு பேசினாா்.

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கே.கே.சி.பாலு ஊத்துக்குளி ஒன்றியம், குன்னத்தூா் பகுதியில் பொதுமக்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தால் பெருந்துறைக்கு வர இருக்கும் நலத் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறினாா்.

மேலும், நெசவாளா்களுக்கு கிடைக்கும் நலத் திட்டங்கள், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக பெருந்துறை அரசு மருத்துவமனையை சீரமைப்பது, சிப்காட் அமைக்க நிலம் வழங்கியவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பது, எந்தவிதத்திலும் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் தொழில் வளா்ச்சி, செயல்திட்டங்கள் இருக்கும் என்று உறுதி கூறி வாக்கு சேகரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.