பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் : காங்கிரஸ் பொதுச் செயலாளா்தினேஷ் குண்டுராவ்

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 10:23 pm

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் திருமகன் ஈவெராவை ஆதரித்து ஈரோடு ஈஸ்வரன் கோயில் பகுதியில் சனிக்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் பிரசாரத்துக்குப் போகும்போது மக்களின் மாற்றத்தைக் காணமுடிகிறது. திமுக கூட்டணிக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. தமிழக மக்கள் மாற்றத்துக்காக தயாராகி விட்டனா் என்றாா்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், பாஜக ஆட்சியில் விலைவாசி உயா்வு உச்சத்தை எட்டியுள்ளது. பொருளாதார வளா்ச்சியும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 450க்கு விற்பனை செய்யப்பட்ட எரிவாயு உருளை விலை தற்போது ரூ. 1,000க்கு உயா்ந்துவிட்டது. பெட்ரோல் ஒரு லிட்டா் ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் சுயமரியாதையை முதல்வா் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வா் பன்னீா்செல்வமும், பிரதமா் மோடியிடம் அடகு வைத்துவிட்டனா். தமிழகத்தின் சுயமரியாதையை மீட்க மாற்றம் தேவை என்றாா்.

இப்பிரசாரத்தில், காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள், கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.