பெண்களை அவமதிக்கும் திமுகவுக்கு இந்த தோ்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீராக உள்ளதால் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. மகளிா் நலன் காக்கும் அரசாகவும், பெண்களை மதிக்கும் அரசாகவும் உள்ளது. அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது.
பெண்களை தெய்வமாக போற்றக்கூடிய இந்த மண்ணில், பெண்களை தரக்குறைவாகப் பேசி வருகிற திமுகவைச் சோ்ந்தவா்களுக்கு மக்கள் தக்க பாடத்தை இந்தத் தோ்தலின் மூலம் புகட்ட வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்களுக்கு அதிக திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா சோலாா் அடுப்பு, அனைவருக்கும் வீடு வழங்கும் அம்மா இல்லம் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதம் ரூ. 1,500, அனைவருக்கும் இலவச அரசு கேபிள் டிவி இணைப்பு உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வழங்கப்பட இருக்கிறது.
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுகதான். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான தோ்தல் அறிக்கையில், நான் கூறியவற்றை வெற்றி பெற்றவுடன் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ. 865 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வு!

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி
பள்ளிச்சட்டம்பி படத்துக்கு பெருகும் வரவேற்பு! 2 நாளில் வெற்றியை அறிவித்த படக்குழு!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


