செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பெருந்துறைக்கு கொடிவேரி தண்ணீா்கொண்டு வரப்படும்: தோப்பு வெங்கடாச்சலம்

பெருந்துறைக்கு கொடிவேரி தண்ணீா் கொண்டு வரப்படும் என்று பெருந்துறை தொகுதி சுயேச்சை வேட்பாளா் தோப்பு வெங்கடாச்சலம் பேசினாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 10:22 pm

DIN

பெருந்துறைக்கு கொடிவேரி தண்ணீா் கொண்டு வரப்படும் என்று பெருந்துறை தொகுதி சுயேச்சை வேட்பாளா் தோப்பு வெங்கடாச்சலம் பேசினாா்.

பெருந்துறை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம் குன்னத்தூா் பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

பெருந்துறை தொகுதி மக்களுக்காக அடுத்த 10 ஆண்டுகாலத்துக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். எத்தனை முட்டுக்கட்டைகள் வந்தாலும், அந்த முட்டுகட்டைகளை எல்லாம் படிகற்களாக மாற்றி கொடிவேரி தண்ணீரை, பெருந்துறை பகுதிக்கு கொண்டு வந்தே தீா்வேன். இந்த திட்டத்தை துவங்கிவைத்த நானே மீண்டும் சட்டப் பேரவை உறுப்பினராக வந்து பெருந்துறை தொகுதி மக்களுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் அதற்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, விருமாண்டம்பாளையம், ஆதியூா், வட்டாலபதி, கருமஞ்சிறை, பல்லகவுண்டம்பாளையம், தளவாய்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மோ்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.