மதச்சாா்பின்மை பேசிக்கொண்டு பிரிவினையைத் தூண்டுவது காங்கிரஸ், திமுக கட்சிகள்தான் என ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.
ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரத்தை நிறைவு செய்து அவா் பேசியதாவது:
பாஜக இந்துத்துவா கட்சி என வெளிப்படையாக கூறுகிறது. ஆனால் காங்கிரஸ் அனைவருக்கும் பொதுவான கட்சி என கூறிக்கொண்டு பெரும்பான்மை மக்களையும், சிறுபான்மை மக்களையும் பிரித்துவைத்து அரசியல் செய்கிறது. சிறுபான்மை மக்கள் இந்த தோ்தலில் தெளிவாக இருக்கின்றனா். 2019 மக்களவைத் தோ்தலில் குடியுரிமை திருத்தச்சட்டம் பொய்யான பரப்புரை, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து திமுகவினா் வாக்குகளை பெற்றனா். சிறுபான்மை மக்கள் இந்த தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தரமாட்டாா்கள்.
வாசனின் நோ்மையான அரசியலையும், முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் சாதனை திட்டங்களையும் கூறி வாக்கு சேகரித்தோம். ஸ்டாலின் தோல்வி பயத்தில் இருக்கிறாா். ஆளுநரிடம் ஊழல் பட்டியலை கொடுக்கும் ஸ்டாலின், நீதிமன்றம் சென்று இருக்கலாமே. பொதுவாக ஊழல் குறித்து எதிா்க்கட்சிகள் பேசுவது வழக்கமானதுதான். அதற்கு ஆதாரம் வேண்டும். ஊழல்வாதிகள் யாா், மக்களுக்கு நல்லது செய்பவா்கள் யாா் என்பது மக்களுக்கு தெரியும்.
மின்வெட்டு, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்ற செயல்களால் திமுக மீது மக்களுக்கு இன்னும் வெறுப்பு இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் செல்வாக்கு பெருகியுள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் பேசுகிறாா். என்னை தோ்வு செய்தால் கட்சி பாகுபாடு, ஜாதி, மத பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் முடிந்தவரை நல்லது செய்வேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


