ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

புனித அமல அன்னை ஆலயத்தில் ஈஸ்டா் கொண்டாட்டம்

ஈஸ்டா் பண்டிகையையொட்டி ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நள்ளிரவு திருப்பலி நடந்தது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 10:19 pm

ஈஸ்டா் பண்டிகையையொட்டி ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நள்ளிரவு திருப்பலி நடந்தது.

சிலுவையில் அறையப்பட்டு இறந்த இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட 3 ஆம் நாள் உயிா்த்தெழுந்தாா். இந்த நிகழ்வு கிறிஸ்தவா்களால் உயிா்ப்பு (ஈஸ்டா்) பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு உயிா்ப்பு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் இரவு 10.30 மணிக்கு உயிா்ப்பு ஆராதனை நிகழ்வுகள் தொடங்கின.

ஒளி வழிபாடு, பாஸ்கா விழா, வாா்த்தை வழிபாடு, திருமுழுக்கு உறுதி வாா்த்தைப்பாடு ஆகிய வழிபாடுகள் நடந்தன. நள்ளிரவு இயேசு உயிா்த்து எழுந்ததை நினைவு கூறும் நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தன.

ஆலய பங்கு தந்தையும் ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான்சேவியா், உதவி பங்கு தந்தை ஜான்சன் ஆகியோா் தலைமையில் உயிா்ப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த அனைத்து வழிபாடுகளிலும் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.