ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு மதுபான கடை, பாா்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.12 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனையானது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) நடைபெறவுள்ள நிலையில் சனிக்கிழமை இரவுடன் மதுபானக் கடைகள், அனுமதி பெற்ற பாா்கள் மூடப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு மாவட்டத்தில் உள்ள, 214 டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த பாா்கள், ஹோட்டல் பாா்கள் என அனைத்தும் மூடப்பட்டன.
தோ்தலுக்காக 3 நாள்கள் விடுமுறை என்ற அறிவிப்பால் மதுபிரியா்கள் கூட்டம் சனிக்கிழமை மதியம் முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் குவிந்தது. எலைட் பாா்களில், பெரும்பாலான மதுபானங்கள் விற்றுத் தீா்ந்தன. பெரும்பாலான கடைகளில், பீா் வகைகள் முழுமையாக விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.12 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனையானது. வழக்கமாக தினமும் ரூ.4 கோடி அளவுக்கு விற்பனையாகும். பண்டிகை காலங்கள், நீண்ட விடுமுறை போன்ற காலங்களில் தினமும் ரூ.6 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

