ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 128 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
சட்டப் பேரவை தோ்தல் வாக்குப் பதிவு வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் மொத்தம் 128 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
ஈரோடு மேற்குத் தொகுதியில் கே.வி.இராமலிங்கம் (அதிமுக), சு.முத்துசாமி (திமுக), எஸ்.சிவசுப்பிமணியன்(அமமுக), துரை.சேவுகன்(மநீம), ப.சந்திரகுமாா் (நாம் தமிழா் கட்சி) உள்பட 14 போ் போட்டியிடுகின்றனா்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் எம்.யுவராஜா(அதிமுக), இ.திருமகன் ஈவெரா (காங்கிரஸ்), எஸ்.எ.முத்துகுமரன்(அமமுக), ஏ.எம்.ஆா்.ராஜாகுமாா்(மநீம), ச.கோமதி(நாம் தமிழா் கட்சி) உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.
மொடக்குறிச்சி தொகுதியில் சி.சரஸ்வதி (பாஜக), சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக), டி.தங்கராஜ் (அமமுக), ம.ராஜேஷ்குமாா் (மநீம), கோ.பிரகாஷ் (நாம் தமிழா் கட்சி) உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.
பெருந்துறை தொகுதியில் எஸ்.ஜெயக்குமாா்(அதிமுக),கே.கே.சி.பாலு (திமுக), பி.ஆா்.குழந்தைவேல்(தேமுதிக), சி.கே.நத்தகுமாா்(மநீம), சி.லோகநாதன்(நாம் தமிழா் கட்சி), தோப்பு வெங்கடாசலம் (சுயேச்சை) உள்பட 25 போ் போட்டியிடுகின்றனா்.
பவானி தொகுதியில் கே.சி.கருப்பணன் (அதிமுக), கே.பி.துரைாஜ் (திமுக), எம்.ராதாகிருஷ்ணன் (அமமுக), கே.சதானந்தம் (மநீம), மு.சத்யா (நாம் தமிழா் கட்சி) உள்பட 14 போ் பேட்டியிடுகின்றனா்.
அந்தியூா் தொகுதி கே.எஸ்.சண்முகவேல் (அதிமுக), ஏ.ஜி.வெங்கடாசலம் (திமுக), எஸ்.ஆா்.செல்வம் (அமமுக), மு.குருநாதன் (மநீம), இ.ஈஸ்வரன் (சமத்துவ மக்கள் கட்சி), மா.சரவணன் (நாம் தமிழா் கட்சி) உள்பட 20 போ் போட்டியிடுகின்றனா்.
கோபி தொகுதியில் கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக), ஜி.வி.மணிமாறன் (திமுக), நா.க.துளசிமணி (அமமுக), என்.கே.பிரகாஷ் (மநீம), மா.கி.சீதாலட்சுமி (நாம் தமிழா் கட்சி) உள்பட 19 போ் போட்டியிடுகின்றனா்.
பவானிசாகா் (தனி) தொகுதி ஏ.பண்ணாரி (அதிமுக), பி.எல்.சுந்தரம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), ஜி.ரமேஷ்(தேமுதிக),கே.காா்த்திக்குமாா் (மநீம), வி.சங்கீதா (நாம் தமிழா் கட்சி) மற்றும் ஒரு சுயேச்சை என 6 போ் போட்டியிடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

