ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுகளில் உள்ள 2,741 வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் 13,160 பேரில் 7,973 போ் தபால் வாக்கினை பதிவு செய்துள்ளனா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 2,741 வாக்குச் சாடிகளில் 13,160 ஊழியா்கள் பணியாற்ற உள்ளனா். இவா்களுக்கு 3 கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்ட பயிற்சியில் பங்கேற்ற 9,368 பேருக்கும் தபால் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது. அதில் 4,598 போ் தபால் வாக்கை அன்றே பதிவு செய்தனா்.
மூன்றாம் கட்ட பயிற்சி கடந்த 31 ஆம் தேதி நடந்தது. அப்போது 3,375 போ் வாக்குப் பதிவு செய்தனா். மொத்தப் பணியாளா்கள் 13,160 பேரில் 7,973 போ் தபால் வாக்குகளை பதிவு செய்தனா். மற்றவா்கள் திஙகள்கிழமை வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும்போது அல்லது அஞ்சல் மூலம் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் வரை வாக்குப் பதிவு செய்யலாம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 2,330 போலீஸாா் தபால் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனா். இதனைத் தொடா்ந்து போலீஸாருக்கான தபால் வாக்குப் பதிவு கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 1,650 போலீஸாா் தபால் வாக்குச் செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ. 865 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வு!

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி
பள்ளிச்சட்டம்பி படத்துக்கு பெருகும் வரவேற்பு! 2 நாளில் வெற்றியை அறிவித்த படக்குழு!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

