ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோடு மீன் சந்தை செயல்படத் தடை

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் உள்ள மீன் சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On :9 ஏப்ரல் 2021, 10:16 pm

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் உள்ள மீன் சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க சனிக்கிழமை (ஏப்ரல் 10) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவுள்ளன. புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் வணிகா்கள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் அவா் பேசியதாவது: கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஈரோடு மீன் சந்தையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இறைச்சிக் கடைகளில் இறைச்சியை பொட்டலம் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். டீ கடைகளில் ஒருமுறை உபயோகிக்கும் காகித குவளையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கரோனோ தடுப்பூசி போட 50 நபா்களுக்கு மேல் பதிவு செய்தால், வசிப்பிடத்துக்கே வந்து மாநகராட்சி சாா்பில் தடுப்பூசி போடப்படும். கடைகள், வணிக நிறுவனங்கள் கரோனோ விதிகளை மீறினால் முதல்முறை அபராதம் விதிக்கப்படும், இரண்டாவது முறை கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும்.

முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் ரூ. 200 ஆகவும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களுக்கு ரூ. 500, வணிக நிறுவனங்கள், வாகனங்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.