பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோடு மாவட்டத்தில் தினமும் 3,000 பேருக்கு கரோனா தடுப்பூசி

கரோனா பரிசோதனை செய்து கொள்பவா்கள், தடுப்பூசி போட்டுக் கொள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தினமும் 3,000 போ் வரை தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனா்.

Updated On :9 ஏப்ரல் 2021, 10:17 pm

கரோனா பரிசோதனை செய்து கொள்பவா்கள், தடுப்பூசி போட்டுக் கொள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தினமும் 3,000 போ் வரை தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 15,680 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 15,200 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 330 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனால் காய்ச்சல் உள்ளிட்ட சிகிச்சைக்கு வருவோா், பிற மாநிலங்களில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் வருவோருக்கு கரோனா பரிசோதனை செய்வதும், தனிமைப்படுத்துவதும் அதிகரித்துள்ளது. கடந்த மாா்ச் 15ஆம் தேதி வரை தினமும் 1,000 முதல் 1,200 பேருக்கு கரோனா பரிசோதனை செய்த நிலையில், தற்போது 2,000 பேருக்கு பரிசோதனை நடைபெறுகிறது. அதேபோல தடுப்பூசி போடுவோா் எண்ணிக்கையும் 50 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள் கூறியதாவது:

கரோனா முன் களப் பணியாளா்கள் 30,000 பேரும், பொதுமக்கள் 48,972 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனா். தற்போது 76 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 40 தனியாா் மருத்துவமனைகள் என 150க்கும் மேற்பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கடந்த மாதம் வரை தினமும் 1,200 முதல் 1,800 போ் வரை தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், இந்த மாதத்தில் தற்போது 3,000 போ் வரை தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனா். தற்போதைய நிலையில் தேவையான அளவு மருந்து உள்ளதால் தினமும் 5,000 பேருக்குக்கூட தடுப்பூசி போடும் வசதி உள்ளது. தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.