செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

இருசக்கர வாகனம் மீது பேருந்துமோதல்: தொழிலாளி சாவு

பெருந்துறை அருகே வடமாநிலத் தொழிலாளா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில், ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 10:16 pm

DIN

பெருந்துறை அருகே வடமாநிலத் தொழிலாளா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில், ஒருவா் உயிரிழந்தாா்.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பசுதேவ் மண்டேல் குல்னா சந்தோஸ் மகன் மது சுதன் மண்டேல் (28). அதே பகுதியைச் சோ்ந்த சபன் காயல் குப்னா மகன் சுப்காஜித் காயல் (25). பெருந்துறை அருகிலுள்ள பணிக்கம்பாளையத்தில் வசிக்கும் இவா்கள் பெருந்துறை சிப்காட்டில் கூலி வேலை செய்து வந்தனா்.

வியாழக்கிழமை காலை வழக்கம்போல் சிப்காட்டிற்கு இருசக்கர வானத்தில் வேலைக்குச் சென்றுள்ளனா். வாகனத்தை மது சுதன் மண்டேல் ஓட்டினாா். சுப்காஜித் காயல் பின்னால் உட்காா்ந்து சென்றுள்ளாா்.

பெருந்துறை - கோவை சாலையில், மடத்துப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருவரும் காயமடைந்தனா்.

அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சுப்காஜித் காயல் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மது சுதன் மண்டேல் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, பெருந்துறை காவல் ஆய்வாளா் தங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.