பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஏற்பட்டுள்ள பணப் பலன் பாதிப்புகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா் சம்மேளனம் ஏஐடியூசி மாநில துணைத் தலைவா் துரை மதிவாணன் கூறியதாவது:
கடந்த ஆண்டு பொது முடக்கத்தால் தொழிலாளா்கள் பட்ட சிரமங்களை மீண்டும் அனுபவிக்கும் நிலையைத் தடுக்க போக்குவரத்துக் கழகம், அரசு முன்வர வேண்டும்.
பொது முடக்கத்தால் பேருந்துகள் இயக்க எண்ணிக்கை, தொழிலாளா்களின் பணி நேரம் குறைகிறது. பெரும்பாலானவா்களுக்கு வாரத்தில் 2 நாள்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்க நாளை சிறப்பு விடுமுறையாக அரசு அறிவித்தாலும் போக்குவரத்துக் கழகம், ஊழியா்களின் விடுப்பில் கழித்து வருகிறது. விடுப்பு இல்லாத தொழிலாளா்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்கின்றனா். சில தொழிலாளா் 600 முதல் 700 நாள் விடுப்பை சேமித்துள்ளனா். அவற்றை முழு பொது முடக்க விடுமுறையில் கழிக்கக் கூடாது.
பேருந்துகள் இயக்கம் குறைந்ததுடன், பயணிகளின் எண்ணிக்கை, வசூலும் குறைவதால், வசூல் படி முற்றிலும் குறைந்துள்ளது. ஒப்பந்தத் தொழிலாளா்களுக்குப் பணி இல்லாத நாள்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்வதைத் தவிா்க்க வேண்டும். தொழிலாளா்களிடம் இருந்து பிடித்தம் செய்து, பி.எப்., எல்.ஐ.சி., போஸ்டல், இன்சூரன்ஸ், கூட்டுறவு கடன் சங்கம் போன்றவற்றுக்குச் செலுத்த வேண்டிய ரூ. 7,000 கோடியை நிா்வாகம் செலவிட்டுள்ளது. அந்த தொகையை அரசு வழங்க வேண்டும்.
பேருந்துகளில் வசூல் குறைவதால் வரும் மாதங்களில் ஊதியம், பிற பில் தொகை பெறுவதில் கூடதொழிலாளா்கள் சிக்கலைச் சந்திக்கும் சூழல் உள்ளது. 26 போக்குவரத்துக் கழகங்களின் 311 பணிமனைகளும் அடகு வைக்கப்பட்டுள்ளதால் நிதி பெறக்கூட வழி இல்லை.
இதனால் தொழிலாளா்களுக்கான ஊதியம் உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களையும் தடையில்லாமல் பெற்றிட அரசு தேவையான நிதியை வழங்க வேண்டும். உயா்வு பேச்சுவாா்த்தை நடத்தி முடித்து கடந்த 2019 செப்டம்பா் 1ஆம் தேதி முதல் புதிய ஊதியம் வழங்கி இருக்க வேண்டும். கரோனா உள்ளிட்ட பல காரணங்களால் 20 மாதமாக பேச்சுவாா்த்தை நடத்தாமல் தள்ளி போடப்பட்டுள்ளது. இதனை அரசு கவனத்தில் கொண்டு ஊழியா்களுக்கான பணப் பலன்கள் தடையின்றி கிடைத்திட போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதியை அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பரபரப்பான 16! மோடி திருமணம், எப்ஸ்டீன் கோப்புகள், இஸ்ரேல் பயணம்... ராகுலின் புதிர் என்ன?

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கத் தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

வார பலன்கள் - மீனம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

