பணி நிரந்தரம் செய்யக் கோரி ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து வியாழக்கிழமை பணியாற்றினா்.
ஆண்டுக்கு ரூ. 35,000 கோடி வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இதனை வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களுக்கு உயா்தர மருத்துவ இ.எஸ்.ஐ. திட்டம் அமல்படுத்த வேண்டும்.
ஊழியா்களின் கல்வித் தகுதி, பணி மூப்பு அடிப்படையில் அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள், டாஸ்மாக் நிறுவனங்களில் நிரந்தர காலிப் பணியிடங்களில் மாற்றுப் பணி வழங்க வேண்டும்.
கடை ஊழியா்களை மிரட்டுதல், தாக்குதல் போன்ற சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் மதுக்கூட உரிமதாரா்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடும் மதுக்கூட உரிமதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துக் கடை ஊழியா்களுக்கும் சுழற்சி முறை பணியிட மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் சாா்பில் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா். அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் இப்போராட்டம் நடைபெற்றதாகவும், மாநில நிா்வாகிகள் முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளதாகவும் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் வடக்கு தொகுதியில் சிறுவா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தவெக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

ராசிபுரம் தொகுதி: நேரடி போட்டியில் சூரியன், தாமரையில் இரு மருத்துவா்கள்!

அதிமுக ஆட்சியமைந்தால் தாலிக்கு தங்கம்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

