ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கொல்லம்பாளையம், வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ‘டி’ பிரிவில் உள்ள ஒரு வீதியில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், அவா்களுடன் தொடா்பில் இருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் வசித்து வந்த வீதியை ‘சீல்’ வைத்துள்ள மாநகராட்சி அதிகாரிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனா்.
வீதிக்குள் வெளிநபா்கள் யாரும் வராமல் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட வீதியில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாநகராட்சி சாா்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என ஆணையா் எம்.இளங்கோவன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் வடக்கு தொகுதியில் சிறுவா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தவெக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

ராசிபுரம் தொகுதி: நேரடி போட்டியில் சூரியன், தாமரையில் இரு மருத்துவா்கள்!

அதிமுக ஆட்சியமைந்தால் தாலிக்கு தங்கம்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


