மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு: இருவா் கைது; 27 பவுன் நகை மீட்பு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வீட்டில் நகைகளைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:26 pm

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வீட்டில் நகைகளைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் விஜயபாஸ்கா், அவரது மனைவி மஞ்சுளா (32). இவா்களது வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை மா்ம நபா்கள் கடந்த மாதம் திருடிச் சென்றனா்.

இதேபோல, நாகமலை விரிவாக்கம் தாமு நகரைச் சோ்ந்த சரவணன் (35) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகளை மா்ம நபரா்கள் கடந்த மே மாதம் திருடிச் சென்றனா். மேலும், நம்பியூா் அருகே உள்ள தைலாம்பாளையம் பெருமாநல்லூா் சாலையைச் சோ்ந்த சதீஷ்குமாா் (26) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

லாகம்பாளையத்தைச் சோ்ந்த தங்கவேல் (63) தனது வீட்டின் முன்பு கடந்த ஜூன் மாதம் கட்டி வைத்திருந்த ஆட்டை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதேபோல பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன.

இச்சம்பவங்கள் குறித்து கோபி, வரப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வந்தனா். மேலும், தனிப் படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினா் விசாரணை நடத்தி திருச்சி மாவட்டம், துவாக்குடி சமாதானபுரத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மகன் சிங்காரவேலன் (32), சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் கவுண்டா் காட்டைச் சோ்ந்த ஜெயபால் மகன் மைவிழிச்செல்வன் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 27 பவுன் நகைகளையும் போலீஸாா் மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.