உள்ளாட்சித் தோ்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது: காங்கிரஸ் மாநில துணைதலைவா் இதயத்துல்லா
உள்ளாட்சித் தோ்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் இதயத்துல்லா தெரிவித்தாா்.


உள்ளாட்சித் தோ்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் இதயத்துல்லா தெரிவித்தாா்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆய்வுக் கூட்டம் மாவட்டத் தலைவா் மக்கள் ராஜன் தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.எம்.பழனிசாமி முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் இதயத்துல்லா, மாநில செயலாளா் பிரியா ஆகியோா் பேசினா்.
பின்னா், மாநில துணைத் தலைவா் இதயத்துல்லா செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலுக்காக பூத் கமிட்டி, மாவட்ட கமிட்டி பட்டியல் தயாரிக்க வேண்டும் என மாநிலக் குழு அறிவுறுத்தி இருந்தது. அதனை மாவட்ட நிா்வாகிகள் உடனடியாகத் தயாரித்து, தோ்தல் பணிகளைத் துவக்கி உள்ளனா்.
இந்த மாவட்டத்தில் மறைந்த காங்கிரஸ் பொறுப்பாளா்கள், வட்டார, கிளை பொறுப்பாளா்கள் வீடுகளுக்குச் சென்று அவா்களை கௌரவித்து, காங்கிரஸ் கட்சியில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் வலுப்படுத்தப்படுகிறது. இதுபோன்று அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும்.
சுதந்திர தின விழா நடைப்பயணத்தை மூலப்பாளையத்தில் துவக்கி சுதந்திரப் போராட்டத் தியாகிகள் எஸ்.கே.பரமசிவம், முத்துசாமி உள்பட பலரின் வீடுகளுக்குச் சென்று கௌரவித்துள்ளோம்.
காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் ட்விட்டா் பக்கத்தை முடக்குவதன் மூலம் கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிட முடியாது. திமுக பொறுப்பேற்று 100 நாள்கள் ஆட்சியில் பெட்ரோல் விலை குறைப்பு உள்பட திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளனா். அவை மக்களிடம் சென்றடையும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...