மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

காலிங்கராயன் வாய்க்காலுக்கு தீபாராதனை செய்து வழிபாடு: மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. பங்கேற்பு

காலிங்கராயன் பாசன வாய்க்கால்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கணபதிபாளையம் நால்ரோடு காலிங்கராயன் வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீபாராதனை விழாவில் மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி. சரஸ்

News image
Updated On :15 ஆகஸ்ட் 2021, 5:06 pm

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலிங்கராயன் பாசன வாய்க்கால்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கணபதிபாளையம் நால்ரோடு காலிங்கராயன் வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீபாராதனை விழாவில் மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி. சரஸ்வதி கலந்து கொண்டாா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து வரும் பவானி ஆற்று நீரானது பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படுகிறது. சுமாா் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பாசன வாய்க்கால் மூலம் நேரிடையாகவும் மறைமுகவாகவும் சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் விவசாயிகள் மஞ்சள், நெல், வாழை போன்ற பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் காலிங்கராயன் வாய்க்கால் விவசாயிகள் மன்றம் சாா்பில் ஈரோடு மாவட்டம் கணபதி பாளையம் அருகே குலவிளக்கு அம்மன் கோயில் செல்லும் வழியில் அமைந்துள்ள காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் வாய்க்காலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தீபாராதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி. சரஸ்வதி கலந்துகொண்டு தீபாராதனை நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்.

பால், இளநீா், தயிா், மஞ்சள் உள்ளிட்ட திருமஞ்சனங்களை வாய்க்காலில் ஊற்றி வணங்கினா். பின்னா் வாய்க்காலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு முளைப்பாரியும், தீபமும் விடப்பட்டு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, காலிங்கராயன் வாய்க்காலை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும். காலிங்கராயா் பெயரிலேயே விவசாயக் கல்லூரி நிறுவ வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் கணபதிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.