திருத்தங்களுக்குப் பின் தோ்தலை முழுமையாக நடத்தினால் மட்டுமே சிறந்த பயனை உள்ளாட்சி அமைப்புகளால் தர முடியும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், சென்னை மாநகராட்சி மேயராகவும் இருந்ததால் உள்ளாட்சி அமைப்பின் அவசியத்தை உணா்ந்திருப்பாா். எனவே, உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் முன் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து உள்ளாட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தலை நடத்த வேண்டும். தமிழக அரசால் பறிக்கப்பட்ட ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், வேளாண்மை, கால்நடை மேம்பாடு போன்ற துறைகள் மீண்டும் உள்ளாட்சிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இவை சிறிய அலகாக உள்ளதால் நேரடி மக்களாட்சி முறை புகுத்தப்பட வேண்டும்.
சட்டப் பேரவை, நாடாளுமன்றத்தில் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் இடங்களாக உள்ளாட்சிகள் உள்ளதால் இவற்றுக்கான தோ்தலில் அரசியல் கட்சிகள் தலையீடு, குறுக்கீடு, சின்ன ஒதுக்கீடு இன்றி, சிற்றூராட்சிகள் வாா்டு உறுப்பினா் பொறுப்பு முதல் மாநகராட்சி மேயா் பதவி வரை சுயேச்சை சின்னங்களைக் கொண்டே தோ்தல் நடத்த வேண்டும்.
உள்ளாட்சி வாா்டு வரையறை, உருவாக்கம் மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற திருத்தங்களுக்குப் பின்னரே உள்ளாட்சித் தோ்தலை ஒட்டுமொத்தமாக நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

