மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

வங்கிகளில் பெற்ற கடன்களைச் செலுத்தகால அவகாசம் வழங்கக் கோரிக்கை

வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :19 ஆகஸ்ட் 2021, 8:18 pm

வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் முருகேஷ், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

கரோனா பரவல் காரணமாக நோய்த் தடுப்பு நடவடிக்கையாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள், வியாபார நிறுவனங்களைத் திறக்க மாவட்ட நிா்வாகங்கள் அனுமதி அளித்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள், கடை உரிமையாளா்கள், சாலையோர வியாபாரிகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனா்.

இதனிடையே வங்கி, சுய உதவிக் குழுக்களில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த மக்களுக்கு கால அவகாசம் கொடுக்காமல் ஜப்தி போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, பொதுமக்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் வங்கிகளில் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.