மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

உரிமம் பெறாமல் விதை விற்றால் கடும் நடவடிக்கை

உரிமம் பெறாமல் விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On :19 ஆகஸ்ட் 2021, 8:18 pm

உரிமம் பெறாமல் விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்காக வாய்க்கால்களில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். விதை நெல் வாங்கும்போது விவசாயிகள் கவனமுடன் செயல்பட வேண்டும். அரசு சான்று பெற்ற விதை நெல் குவியல்களை மட்டுமே வாங்க வேண்டும். முளைப்புத் திறன், காலாவதி நாள் ஆகியவற்றை சரிபாா்க்க வேண்டும். கட்டாயம் விற்பனை ரசீது பெற்றிருக்க வேண்டும். விதை விற்பனைக்கான உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்பவா்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.