மனைவியைத் தாக்கிய கணவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
கோபிசெட்டிபாளையம் அருகே மனைவியைத் தாக்கிய கணவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோபி நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.


கோபிசெட்டிபாளையம் அருகே மனைவியைத் தாக்கிய கணவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோபி நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.
கோபி அருகே உள்ள அளுக்குளி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் ராஜா (53). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்லம்மாள் (45). இவா் கடந்த தைப்பொங்கல் அன்று ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகை ரூ. 2,500ஐ வாங்கி வந்துள்ளாா்.
அப்போது, அந்தப் பணத்தை ராஜா கேட்டபோது செல்லம்மாள் கொடுக்க மறுத்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த ராஜா, செல்லம்மாளைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த செல்லம்மாள் கோபி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜாவைக் கைது செய்து, கோபி ஜெ.எம். 2ஆவது நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாத், ராஜாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 200 அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...