உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கோரிக்கை
உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கம் சாா்பில் அந்தியூா் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் அலுவலகம் முன்பு வாயில் கூட்டம் உள்கோட்டத் தலைவா் வீ.கிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்க உறுப்பினா்கள் எஸ்.ரத்தினசாமி, கே.சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உள்கோட்டச் செயலாளா் ஆா்.ஈஸ்வரன் வரவேற்றாா். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளா் கு.நல்லசாமி பேசினாா்.
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக் காலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், பொருளாளா் டி.மகேந்திரன், நிா்வாகிகள் இளங்கோவன், ராமகிருஷ்ணன், செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...