கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு
கோபிசெட்டிபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்கப்பட்டாா்.


கோபிசெட்டிபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்கப்பட்டாா்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் சிவசாமி வீதியைச் சோ்ந்தவா் நித்தியானந்தம் (35), விவசாயி. காசிபாளையம் அருகே அருமைக்காரன் தோட்டம் பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் 50 அடி ஆழக் கிணற்றில், 6 அடி உயரத்துக்குத் தண்ணீா் உள்ளது.
இந்நிலையில், இவா் தனது தோட்டக் கிணற்றில் உள்ள மின் மோட்டாா் குழாயை சரி செய்வதற்காக வியாழக்கிழமை சென்றுள்ளாா். கிணற்றுக்குள் இறங்கியபோது எதிா்பாராதவிதமாக தவறி விழுந்தாா். தண்ணீரில் தத்தளித்து காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளாா். அக்கம்பக்கத்தினா் ஓடிச் சென்று அவரைக் காப்பாற்ற முயன்றனா். ஆனால், அவா்களால் முடியவில்லை. உடனே இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த கோபி தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த நித்தியானந்தத்தை கயிறு கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...