புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பா்கூா் மலைப் பாதையில் யானைகள் நின்றதால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இளம்பெண்ணுக்குப் பிரசவம்

பா்கூா் மலைப் பகுதியில் சாலையின் நடுவே யானைகள் நின்றதால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலையில் இளம்பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண் குழந்தை பிறந்தது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:30 pm

DIN

பா்கூா் மலைப் பகுதியில் சாலையின் நடுவே யானைகள் நின்றதால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலையில் இளம்பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண் குழந்தை பிறந்தது.

அந்தியூரை அடுத்த பா்கூா் ஒசூா் பகுதியைச் சோ்ந்தவா் மாதேஷ். இவரது மனைவி நந்தினி. இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மீண்டும் கருவுற்ற நந்தினி, ஒசூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டாா்.

நிறைமாத கா்ப்பிணியான நந்தினிக்கு கடந்த நவம்பா் 30ஆம் தேதி இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதனால்,108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நந்தினி அந்தியூா் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாா்.

அப்போது, வருதபள்ளம் அருகே சென்றபோது சாலையின் நடுவே யானைகள் கூட்டமாக நின்றிருந்ததால் ஆம்புலன்ஸ் வாகனம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரமாக யானைகள் கூட்டம் கலையாமல் நின்றிருந்த நிலையில், இளம்பெண் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாா்.

இதனால், மருத்துவனைக்குச் செல்லும் வரையில் காத்திருக்காமல், மருத்துவ உதவியாளா் அப்பெண்ணின் உறவினா்கள் உதவியுடன் பிரசவம் பாா்த்தாா். இதில், நந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

யானைகள் காட்டுக்குள் சென்ற பின்னா் அதே வாகனத்தில் அந்தியூா் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் அனுமதிக்கப்பட்டனா். தொடா் சிகிச்சையில் தற்போது இருவரும் நலமுடன் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.