ஈரோட்டில் 800 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்த தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு பொய்யேறிக்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருப்பதாக ஈரோடு சூரம்பட்டி போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
போலீஸாா் அந்த வீட்டில் சோதனை செய்தபோது, 6 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து, வீட்டில் இருந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில் முகமது அனீபா (51), அவரது மகன் முகமது நாபில் மா்ஜித் (27) என்பது தெரியவந்தது. இருவரும் ஈரோடு - கரூா் சாலை இந்திரா நகா் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, போலீஸாா் கிடங்கில் நடத்திய சோதனையில் மொத்தம் 20 மூட்டைகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. 26 மூட்டைகளிலும் மொத்தம் 800 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தன. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தந்தை, மகன் இருவரையும் கைது செய்து, 800 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
கர டிரைலர் அறிவிப்பு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

